‘கட்டிங்’ அடித்துவிட்டு பாலத்திற்கு கீழ் குறட்டை விட்ட போதை ஆசாமி.. திடீரென வந்த வெள்ளம் : ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan1 August 2024, 11:56 am
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிகப்படியான உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் காரணமாக திருச்சி முக்கொம்பு அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 90 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது
அதில் காவிரியில் 30 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடத்தில் 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்திய நிலையில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் ஆற்றில் பாலத்தின் கீழே உள்ள கட்டைப் பகுதியில் சசிகுமார்(60) என்ற நபர் நேற்று இரவு தூங்குவதற்காக சென்று உள்ளார்.
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் வெளியே வர முடியாமல் அங்கேயே அவர் சிக்கிக்கொண்டார். இது குறித்து ஶ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு இருக்க தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாலத்திற்கு கீழ் தூங்கிய போதை ஆசாமி : திடீரென வந்த வெள்ளம்!#Trending | #Trichy | #Bridge | #River | #Fireservice | #rescue | #ViralVideos | #updatenews360 pic.twitter.com/2kdtN2pGUS
— UpdateNews360Tamil (@updatenewstamil) August 1, 2024
அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் இரு பாலங்களிலும் கயிறுகளை கட்டி சிக்கி இருந்த நபரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்..