திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை எந்நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் இடமாகும்.
இந்தசாலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் வாகனங்களை மறித்தும், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களை ஆபாச வார்த்தைகளால் வசை பாடியும் ரகளையில் ஈடுபட்டு வருவதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நகராட்சி சந்தை பகுதிக்கு சென்ற போலீசார் பார்த்த போது அங்கு ஒரு பெண் டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு, போதை தலைக்கேறிய நிலையில் கலாட்டாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனடியாக அப்பெண்ணை போலீசார் அப்புற படுத்த முற்பட்டபோது போலீசாரின் முயற்சி பலனளிக்கவில்லை. போலீசாரிடம் திமிறி சென்ற போதை பெண் அங்கு வந்த அரசு பேருந்தை நிறுத்தி, அதன் மீது ஹாயாக சாய்ந்து கொண்டு போலீசார் சொல்வதை கேட்க்காமல் அடம் பிடித்தார்.
மேலும் அங்கு சென்ற காரை மடக்கியவர் காரின் சாவியை எடுத்து கொண்டு சென்றார். போலீசாரையும் கையை பிடித்து இழுத்து வசை பாடினார்.
போலீசாரிடம் எனக்கு குவாட்டர் கொடுத்தால் தான் வருவேன் எனவும், தலை வலி வராத எக்ஸ்பிரஸ் ரக பிராந்தி தான் வேண்டும் என அடம்பிடித்தார்.
பின் அவரை சமாதானம் செய்த போலீசார் வேறு வழியில்லாமல் குவாட்டர் வாங்கி வர சொல்ல, லாவகமாக ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீசாரின் விசாரணையில் அப்பெண் திருப்பூர் கலைஞர் நகரை சேர்ந்த மகேஷ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவிற்கு அடிமையானதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் இது போல கலாட்டாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் பெண் போலீசார் அவரை நன்கு கவனித்து, பின்னர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். காங்கேயத்தில் குடிபோதையில் பெண் ஒருவர் அரசு பேருந்து மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\
மேலும் போதையில் பெண் ரகளை செய்யும் வீடியோக்கள் காங்கேயம் பகுதிகளில் வாட்ஆப் மற்றும் பேஸ்பூக் போன்ற வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.