குடிபோதையில் தகராறு : ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சமையல் மாஸ்டர்கள்…

Author: kavin kumar
16 February 2022, 1:22 pm

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குடிபோதையில் சமையல் மாஸ்டர்கள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டி டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தையா(50), இருதயராஜ்(45). இருவரும் சமையல் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே நேற்றிரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

கட்டையால் தாக்கப்பட்ட இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1617

    0

    0