பேருந்து நிலையத்தில் போதையில் தம்பதி அட்டூழியம்… தடுக்க வந்த போலீசுக்கு நேர்ந்த ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2024, 2:42 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நாளுக்கு நாள் மது குடித்துவிட்டு ரகளை செய்யும் நபர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை, திருப்பூர் நீலகிரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் அந்த கூட்டத்திற்கு மத்தியில் ஒரு தம்பதியினர் இருவரும் கடுமையாக தாக்கி சன்டையிட்டு கொண்டனர்.

Drunken Couples in COimbatore Bus Stop

தம்பதியினர் இருவரும் மது போதையில் இருந்த நிலையில் பயணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையில் திட்டிக் கொண்டு கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு அடி தடி ரகளையில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்க: காருக்கு அடியில் நிறைமாத கர்ப்பிணி… துடித்துடித்து உயிரிழந்த பெண் காவலர்!

சண்டையை தடுக்க சென்ற அனைவரிடமும் தகாத பேச்சு மற்றும் அவர்களையும் அந்த பெண் தாக்க முயன்றதால் அங்கு கூடியிருந்த அனைவரும் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர்.

அப்போது அங்கு வந்த பெண் காவலர்கள் இருவர் அந்த பெண்ணிடம் இருந்த கம்பை பிடுங்க முயன்ற போது போலீசாரையும் அந்த பெண் தகாத வார்த்தைகளால் வசைபாடியதுடன் காவலர்களையும் தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Drunken Couples

பின்னர் பெண் காவலர்கள் சாதுர்யமாக செயல்பட்டு அந்த பெண்ணிடம் இருந்த கம்பை பிடுங்கினர். அதற்குள் அங்கு ஆண் காவலர்கள் வந்த நிலையில் அந்த ஆணையும் பெண்ணையும் அங்கிருந்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றினார்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அடிக்கடி இதுமாதிரியான சம்பவம் நடைபெறுவது பயணிகள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்பத்தி வருவதுடன் பாதுகாப்புக்காக இருந்த போலீசாரையே தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  • Vijay Attends in Keerthy Suresh Marriage கோவாவில் கோலாகலமாக நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்..வேஷ்டி சட்டையில் விஜய்!
  • Views: - 121

    0

    0

    Leave a Reply