மதுபோதையில் திமுக பிரமுகர் அராஜகம்… நடைபாதை வியாபாரிகளின் பொருட்களை சாலையில் எறிந்து அட்டூழியம் ; அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan7 August 2023, 6:35 pm
சேலம் ; வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் முத்து மலை முருகன் கோவில் வளாகத்தில் திமுக பிரமுகர் அராஜகம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள 146 அடி உயரமுள்ள முத்து மலை முருகன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாநிலம் மாவட்டம் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கடைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இதில், நேற்று மாலை அங்கு வந்த ஏத்தாப்பூர் பேரூராட்சித் தலைவர் அன்பழகன் மதுபோதையில் சாலையோர கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, கடையில் வைத்திருந்த பொருட்களை வீதியில் வீசி எறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டார். இதனால், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இச்செயலை பார்த்து முகம் சுளித்தும் அச்சத்திலும் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்பொழுது, அவர் செய்த அராஜகம் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.