நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிய போதை ஓட்டுநர்… போக்குவரத்து பாதிப்பு: அலப்பறை கொடுத்ததால் பொதுமக்கள் ஆத்திரம்!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 7:15 pm

தூத்துக்குடி : விளாத்திகுளத்தில் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு குடிபோதையில் தூங்கிய லாரி டிரைவரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில், விளாத்திகுளத்திலிருந்து – கோவில்பட்டி, திருநெல்வேலி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், குடிபோதையில் லாரி ஓட்டுனர் ஒருவர் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் அவ்வழியாக அரசு பேருந்து உட்பட கார், இருசக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் நீண்ட நேரமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனால் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் பொதுமக்கள் லாரியில் சென்று பார்த்த போது லாரியின் ஓட்டுனர் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு சத்தம் போட்டு அவரை எழுப்பினர். ஆனால், அந்த லாரி ஓட்டுநர், “தான் கிளீனர் என்றும், லாரி ஓட்டுநர் எங்கோ சென்று விட்டார் என்றும், மது போதையில் மலுப்பலாக உளரினார்.

மேலும், எழுப்பிய அரசு பேருந்து நடத்தினரிடம், “என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்று தெனாவட்டாக கூறிவிட்டு மீண்டும் உறங்க கிளம்பினார் அந்த குடிமகன்”. இதையடுத்து அங்கு அதிக அளவில் போக்குவரத்து நெரிசலாகவே பொதுமக்கள் வண்டியை எடுக்க சத்தம் போட்டதால் மிகுந்த குடிபோதையில் லாரி ஓட்டுநர் அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதி முன்னும் பின்னும் ஆக லாரியை ஒட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அலப்பறையை கூட்டினார்.

இதைப் பார்த்து பயந்த பொதுமக்கள் லாரியை நிப்பாட்டுமாறு கூறி இறங்கச்சொல்லி… தர்ம அடி கொடுத்து கீழே இறக்கினர். பின்னர் பொதுமக்களில் ஒருவர் லாரியை எடுத்து ஓரமாக நிறுத்தியப்பின்னர் நீண்ட நேரமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சரி செய்யப்பட்டது. குடிகார லாரி டிரைவரின் அலப்பறையினால் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் பிரதான சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்