‘வண்டிய ஓட்டியே ஆவேன்’.. குடிபோதையில் அரசு ஓட்டுநர் செய்த அட்ராசிட்டி ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 1:09 pm

நீலகிரி ; குடிபோதையில் அரசு ஜீப்பை இயக்கிய ஓட்டுனரின் வீடியோ வைரலான நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

உதகை எட்டின்ஸ் சாலையில் நேற்று மாலை தமிழக அரசு ஜீப்பை சரவணகுமார் என்பவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது மிகவும் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப்பை இயக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று பார்த்த பொழுது, அந்த ஜீப்பை இயக்கிக் கொண்டிருந்தவர் முழு குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், பொதுமக்கள் அவரை வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்திய நிலையில், அதனையும் கேட்காமல் மீறி அங்கிருந்து வாகனத்தை ஓட்ட முற்பட்டுள்ளார்.

இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் அவரது செயலை வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்ததை அடுத்த அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என குன்னூர் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பெயரில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் டிரைவர் சரவண குமாரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?