போதையில் தலை, கால் புரியாமல் மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை.. அலறிய செவிலயர்கள் : ஷாக் VIDEO!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியையொட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர் , நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி 700க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இருப்பினும் இம்மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள். செவிலியர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க கூடிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இம்மருத்துவமனையில் முச்சுதிணறல் காரணமாக சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு ட்ரிப்ஸ் (சிலைன்) போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நோயாளி அனுமதிக்கப்பட்ட வார்டில் செவிலியர் பணியில் இல்லாத நிலையில் நோயாளி அவதிபட்டிருந்த நிலையினை கண்ட அங்கிருந்த ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த பெண் துப்புரவு பணியாளர் நோயாளிக்கு ட்ரிப்ஸ் போட்டுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த நோயாளியின் பாதுகாவலர் ஒருவர் அதனை தனது செல்போனில் பதிவுசெய்து சமூகவலைதளங்களில் வைரலாக்கியுள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவு மன்னார்குடி விழல்காரதெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது இந்த நிலையில் வடிவேலு மது போதையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று அங்கு உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: ஆமாம்.. COVISHIELD மருந்து பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட இங்கிலாந்து நிறுவனம்!
அப்போது மருத்துவம் பார்த்து இருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவிட்டனர். மருத்துவமனையில் நள்ளிரவு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட விழல்காரர் தெரு பகுதியை சேர்ந்த வடிவேலை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவு வடிவேல் என்பவர் மது போதையில் ஈடுபட்டு ரகளை செய்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.