மொடாக்குடினு சொல்லுவாங்களே அது இதுதானா? குவாட்டர் பாட்டிலை ஒரே ரவுண்டில் கவுத்திய பட்டாசு பாலு.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 5:01 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். காசு கொடுத்து ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கினார்.

அதன்பின்னர் வாங்கிய குவாட்டர் பாட்டிலை சாமியை வேண்டிபடி, வாயில் வைத்து எடுக்காமல், வண்டி பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஊற்றுவது போல, ஒரே ரவுண்டில் குடித்து முடித்தார்.

அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர்கள், அவரிடம் பேசியவாறு வீடியோ எடுத்துள்ளனர். அதில் பேசிய அந்த மது பிரியர், தன் பெயர் பட்டாசு பாலு என்றும், என்னை போல் வேலை செய்ய வேண்டும் என்றால் 101 பேர் வந்தாலும் ஆகாது.

https://vimeo.com/858168841?share=copy

காலையில் ஐந்து இட்லி, இரண்டு தோசை, மதியம் முழு சாப்பாடு சாப்பிடுவதாகவும், 3 குவாட்டர் குடிப்பேன் என்றும், இரவில் குடிப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்றும் பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 392

    0

    0