போதையில் வந்த இளைஞரை காலால் எட்டி உதைத்த விவகாரம்… உதவி ஆய்வாளர் உள்பட 3 போலீசார் பணியிடை நீக்கம்

Author: Babu Lakshmanan
21 February 2024, 12:36 pm

சென்னை : கோயம்பேடு அருகே போதையில் வந்த இளைஞரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோயம்பேடு – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அதற்காக, அந்த இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞருக்கும், போலீசாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதோடு காலாலும் எட்டி உதைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், கோயம்பேடு போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல், முதல்நிலைக் காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 302

    0

    0