‘ஓட்டல் எங்கே இருக்கு-னு சொன்னது குத்தமா..?’ பேருந்து நிலைய காவலாளி தாக்கிய போதை ஆசாமி ; அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 9:28 pm

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி காவலாளியை விரட்டி விரட்டி அடித்து விரட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் உள்ளது‌. இந்த பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் சென்று வருகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர‌

பேருந்து நிலையத்தில் மாநகராட்சி காவலாளிகள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து திறக்கப்பட்ட ஐந்து மாத காலங்கள் ஆகியும் இதுவரை புறநகர் காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மது மற்றும் கஞ்சா போதையில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள மாநகராட்சி காவலர்களிடமும் தகராறில் ஈடுபட்டு வருவதாக வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மது போதையில் கையில் தடியுடன் வந்த ஒருவர் மாநகராட்சி காவலாளியை விரட்டி விரட்டி அடித்து தாக்குதலில் ஈடுபடுகிறார். சம்பவத்தை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் வேடிக்கை பார்ப்பது போல் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இன்று பேருந்து நிலையத்தில் விசாரித்த போது, நேற்று இரவு ஒய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயக்குமார் பேருந்து நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தபோது, ஒருவர் குடிபோதையில் வந்து இங்கு ஹோட்டல் எங்கே இருக்கிறது என கேட்டுள்ளார். அப்போது, வெளியே உள்ளது என காவலாளி தெரிவித்துள்ளார். அப்போது ,வெளியே சென்ற அவர், உடனே திரும்பி குச்சியுடன் வந்து காவலாளியை கடுமையாக தாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஐந்து மாத காலம் ஆகியும் புற காவல் நிலையம் அமைக்கப்படவில்லை என்றும், மேலும் போலீசார் முறையாக ரோந்து பணியிலும் ஈடுபடவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!