ரயிலின் மீது ஏறி அமர்ந்து அலப்பறை… மதுபோதை ஆசாமியால் பரபரப்பான ரயில்நிலையம்… படாதபாடு பட்ட போலீஸ்!!

Author: Babu Lakshmanan
25 January 2024, 9:06 pm

ஆலப்பூழாவில் இருந்து தான்பாத் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மது போதையில் இருந்த நபர் ஒருவர் ரயிலின் மீது ஏறி அமர்ந்ததால் பரபரப்பு நிலவியது.

ஆலப்புழாவில் இருந்து சேலம் வழியாக தான்பாத் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை சென்றது. அப்போது, பொம்மிடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் நின்றபோது, அதே ரயிலில் பயணித்த 45 வயதுடைய நபர் ஒருவர், மதுபோதையில் ரயிலின் மீது ஏறி தவழ்ந்து சென்று அமர்ந்துக்கொண்டார்.

இது அங்கிருந்த ரயில் பயணிகளிடையே ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பொம்மிடி ரயில் நிலைய அதிகாரிகள் ரயில்வே போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில், அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயிலின் மீது ஏறி அமர்ந்த நபரை மீட்டனர். பின்பு அதே எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் ரயில் நிலையத்திற்கு அந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் சுமார் பத்து நிமிடம் எக்ஸ்பிரஸ் தாமதமாக நின்று சென்றது.

இந்த நபர் ரயிலின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாரா..? அல்லது மது போதையில் ரகளை ஈடுபட்டாரா..? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!