‘நீங்க காக்கி சட்டை போட்டா? கம்முனு இருங்க’… காவல்நிலையம் முன்பு மதுப்பிரியர் அட்ராசிட்டி.. வைரல் வீடியோ!!

Author: Babu Lakshmanan
27 June 2023, 12:35 pm

திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலையத்தில் முன்பு மது பிரியர் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி ஒருவர் காவல் நிலைய வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அவரிடம் சார்பு ஆய்வாளர் நீ யார்? எதற்காக இரு சக்கர வாகனத்தை காவல் நிலைய வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறாய் என்று விசாரித்தார்.

அப்போது அவர் தான் குட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்தவர் என்றும், இருங்க என் மாமாவிற்கு போன் பன்றேன் என்றும் சம்பந்தமே இல்லாமல் பேசினார். அவர் அளவு கடந்த போதையில் இருப்பதை அறிந்த சார்பு ஆய்வாளர் அவரை இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்லுமாறு கூறினார்.

என்ன பண்றது இப்படியே வண்டியை கொண்டு வந்து நிப்பாட்டிட்டு போற மாதிரி இருக்கு, என்று அந்த போதை ஆசாமி உளறிக்கொண்டே, ஸ்டார்ட் செய்ய முயன்றார். அப்போது, அவது இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. எனவே அருகில் இருந்த போலீசாரை கூப்பிட்டு ஸ்டார்ட் செய்து கொடுக்குமாறு கூறினார்.

எப்படிடா போறது என்று நான் ரெம்ப நேரமா தவிச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க பொசுக்குன்னு போன்னு சொல்றீங்க. நீங்க காக்கி சட்டைய போட்டா? கம்முனு இருங்க. நீங்க பெத்த அப்பன் மாதிரி இருக்கணும். உதவி பன்னனும். நான் போக முடியாத தவிப்புல இருக்கேன் என்னதான் பண்றது?! ஐயோ கால கொடுமையா இருக்கே என்று அட்ராசிட்டி செய்தார்.

அங்கிருந்த போலீசார், மதுப்பிரியர் புல் போதையில் இருந்ததால் பொறுமை காத்து, நீ கிளம்புப்பா எதுனாலும் காலையில் பேசிக்கல்லாம் என கூறி சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ