போதையில் போலீசாரிடம் அடாவடி செய்த இளைஞர்.. தோளில் தட்டி வேனில் ஏற்றிய போலீஸ் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 April 2023, 9:39 am

கோவை : கோவையை அடுத்த பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே போதை இளைஞர் செய்த அட்ராசிட்டி சம்பவம் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததை கண்ட போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது, அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆத்திரமடைந்த போதை இளைஞர், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய இளைஞரை கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திகைத்து நின்று வேடிக்கை பார்க்க துவங்கினர்.

செய்வதரியாது திகைத்து நின்ற போலீசார் இளைஞரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அடங்காத போதை இளைஞரால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. பின்னர் அங்கிருந்த போலீசார் போதை இளைஞரை அதிவிரைவு படை வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது.

மாற்று திறனாளி என்பதால் அறிவுறை கூறி அந்த இளைஞரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

https://player.vimeo.com/video/817516276?h=feb22b749a&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி