‘ஐயோ ஐயோ என்னை போட்டோ எடுக்காதீங்க’… பேருந்தில் அலப்பறை ; போலீசாரை பார்த்ததும் நடித்து நாடகமாடிய போதை ஆசாமி…!!

Author: Babu Lakshmanan
9 January 2024, 9:54 pm

விருத்தாசலம் அருகே அரசு பேருந்தின் படியில் ஏறி உட்கார்ந்து அலப்பறை செய்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து அகரம் மற்றும் ஆலம்பாடி வழியாக சேத்தியாத்தோப்பு செல்லும் அரசு பேருந்து தடம் எண் 31 பஸ் நிலைத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது,

ஸ்டேட் பேங்க் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்ற பஸ் நின்றபோது, திடீரென்று மது போதையில் இருந்த ஆசாமி ஒருவர் அரசுப் பேருந்தின் படியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கண்டக்டர் அவரை உள்ளே ஏற சொன்ன போது போதை ஆசாமி மேலே ஏறாமலும், கீழேயும் இறங்காமலும் படியில் உட்கார்ந்து கொண்டு அலப்பறையில் ஈடுபட்டார்.

இதனால் அரசு பேருந்தின் நடத்துநருக்கும், போதை ஆசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் பேருந்தின் ஓட்டுனர் ஸ்டேட் பாங்க் அருகிலுள்ள பஸ் நிறுத்தம் அருகிலேயே நிறுத்திவிட்டு அருகிலிருந்த போலிஸ் பூத்தில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.

பின்னர் அங்கு வந்த காவலர் படியில் அமர்ந்திருந்த மது போதை ஆசாமியை கீழே இறக்கி பஸ்ஸை அனுப்பி வைத்தார். தொடர்ந்து, போதை ஆசாமியிடம் போலீசார் அவரது முகவரியை கேட்டு புகைப்படம் எடுக்கும் போது, “ஐயோ ஐயோ என்ன போட்டோ எடுக்காதீர்கள்,” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார். போதை ஆசாமியால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!