‘இந்த தெருவில் யாரும் உயிரோடு இருக்க முடியாது’… மதுபோதையில் அராஜகம் செய்த நபர் ; அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan4 July 2023, 9:28 pm
பழனியில் மதுபோதையில் ஒருவர் அரிவாளை கையில் வைத்து கொண்டு வெட்டுவேன் குத்துவேன் என தெருவில் மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி 11வது வார்டு பெரிய கடை வீதி குறுக்கு சந்து உள்ளது. இந்தப் பகுதியில் மணி என்பவர் குடிபோதையில் அரிவாளை வைத்துக்கொண்டு அனைவரையும் வெட்டுவேன், குத்துவேன் என்று அவ்வப்போது பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று குடிபோதையில் அரிவாளை வைத்துக் கொண்டு வீட்டின் முன் அமர்ந்து இருக்கும் பெண்களை ஆயுதத்தை காட்டி, இந்த தெருவில் யாரும் உயிரோடு இருக்க முடியாது எனவும், வெட்டி கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அரிவாளை வைத்து சுற்றி திரியும் நபர்களை நகர போலீசார் கைது செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோன்று அரிவாளை வைத்து தெருக்களில் உலா வருவதால் பொதுமக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.