‘என்னை மீறி பஸ்ஸை எடு பார்ப்போம்’… அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி ; ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
2 November 2023, 10:00 pm

திருவள்ளுர் அருகே மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்த மது பிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

திருவள்ளூர் அடுத்த கொரக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் குரு, கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்ட இவர், அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். பேரம்பாக்கம் பகுதியில் இருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, கூவம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது, மதுபோதையில் வந்த குரு, பேருந்தின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வழிமறித்தார். பின்னர், பேருந்து இங்கிருந்து எடுக்கக் கூடாது என பேருந்து ஓட்டுநரிடம் மது போதையில் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனை அடுத்து குறுக்கே இருந்த இருசக்கர வாகனத்தை இடிக்காமல் இடது புறமாக பேருந்தை ஓட்டுநர் எடுக்க முயன்ற போது, ஆத்திரமடைந்த மதுபோதை நபர், அருகே இருந்த கட்டையை எடுத்து பேருந்து முன் பக்க கண்ணாடி, ஓட்டுனர் இருக்கை அருகே இருந்த கண்ணாடி, பின்பக்க கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடி என அனைத்து கண்ணாடிகளையும் அடித்து உடைத்துள்ளார்.

https://player.vimeo.com/video/880548030?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

மதுபோதையில் நபர் ஒருவர் அரசு பேருந்தை அடித்து உடைக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஏற்படுத்தி வரும் நிலையில், மது போதை நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!