குடும்பத்தை சிதைத்த சந்தேகம்… குடிபோதையில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவன்..!!

Author: Babu Lakshmanan
12 July 2022, 1:53 pm

செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவன், போலீஸில் சரணடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்தவர் விஜி (34). இவருக்கு செல்வி (30) என்ற மனைவி உள்ளார். மனைவியின் நடத்தையின் மீது சந்தேகத்தால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த விஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அருகில் வைத்திருந்த சுத்தியை எடுத்து செல்வியின் தலையில் பயங்கரமாக அடித்துள்ளார் விஜி. இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார். பின்னர் மேல் செங்கம் காவல் நிலையத்தில் கணவர் விஜி சரண் அடைந்தார்.

இது குறித்து மேல் செங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 872

    0

    0