‘ஓரம் போ.. ஓரம் போ’.. கரகம் வைப்பது போல தலையில் மதுபாட்டில்… நடுரோட்டில் போதை ஆசாமி செய்த அட்ராசிட்டி.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
12 July 2023, 10:50 am

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முக்கிய சாலை வழியாக நேற்று மாலை ஒருவர் மது பாட்டிலை தலையில் கலசம் வைத்து கொண்டு செல்வது போல் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

காங்கேயம் மெயின் ரோடு பகுதியில் இருந்து ஒரு கூலி தொழிலாளி மது அருந்திவிட்டு, மற்றொரு மது பாட்டிலை வாங்கிக் கொண்டு தலையில் கலசம் வைப்பது போல் எடுத்துக்கொண்டு, கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியை கடந்து செல்கின்றார். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் கூச்சலிட்டும், எச்சரிக்கை விடுத்தும் சத்தமிடுகின்றனர்.

ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அந்த போதை ஆசாமி கோயம்புத்தூர் – கரூர் தேசிய நெடுஞ்சாலையை சாவகாசமாக கடந்து செல்வதும், அப்போது தாராபுரம் சாலையிலிருந்து சிக்னல் திறந்து விடப்படுகின்றது, அதையும் கண்டு கொள்ளாமல் எதிரே வரும் வாகனங்களை துச்சம் என மதித்து பாட்டிலை தலையில் வைத்து லாபகமாக நடந்து செல்கின்றார்.

இந்த பகுதியானது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வருவாய் துறை அலுவலகம், நீதிமன்றம், ஆகிய பகுதிகளை உள்ளது . இவ்வளவு அரசு அலுவலகங்கள் இருந்து துளியும் கூச்சம் இல்லாமல் அந்த போதை ஆசாமி கடந்து செல்கின்றார். இந்த வீடியோ வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. 

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி