திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முக்கிய சாலை வழியாக நேற்று மாலை ஒருவர் மது பாட்டிலை தலையில் கலசம் வைத்து கொண்டு செல்வது போல் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.
காங்கேயம் மெயின் ரோடு பகுதியில் இருந்து ஒரு கூலி தொழிலாளி மது அருந்திவிட்டு, மற்றொரு மது பாட்டிலை வாங்கிக் கொண்டு தலையில் கலசம் வைப்பது போல் எடுத்துக்கொண்டு, கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியை கடந்து செல்கின்றார். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் கூச்சலிட்டும், எச்சரிக்கை விடுத்தும் சத்தமிடுகின்றனர்.
ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அந்த போதை ஆசாமி கோயம்புத்தூர் – கரூர் தேசிய நெடுஞ்சாலையை சாவகாசமாக கடந்து செல்வதும், அப்போது தாராபுரம் சாலையிலிருந்து சிக்னல் திறந்து விடப்படுகின்றது, அதையும் கண்டு கொள்ளாமல் எதிரே வரும் வாகனங்களை துச்சம் என மதித்து பாட்டிலை தலையில் வைத்து லாபகமாக நடந்து செல்கின்றார்.
இந்த பகுதியானது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வருவாய் துறை அலுவலகம், நீதிமன்றம், ஆகிய பகுதிகளை உள்ளது . இவ்வளவு அரசு அலுவலகங்கள் இருந்து துளியும் கூச்சம் இல்லாமல் அந்த போதை ஆசாமி கடந்து செல்கின்றார். இந்த வீடியோ வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.