மதுபோதையில் டியூட்டிக்கு வந்த காவலர்… வாகன ஓட்டிகளை மிரட்டி வசூல் வேட்டை ; நடவடிக்கை பாயுமா…?

Author: Babu Lakshmanan
14 December 2023, 12:26 pm

சிவகங்கை அருகே பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் வந்த காவலர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே பனங்காடி சாலையில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் தங்கும் விடுதியான தாய் இல்லம் அமைந்துள்ளது. இங்குள்ள நிர்வாகிக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, ஒரு காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பாதுகாப்புக்கு வந்த காவலர் மது போதையில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து மிரட்டி கையூட்டு வாங்கியதாக கூறப்படுகிறது. மது போதையில் காவலர் மிரட்டி வசூல் செய்ததை வாகன ஓட்டிகள் சிலர் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மது போதையில் வாகன ஓட்டிகளை மிரட்டி வசூல் செய்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இதுபோன்ற ஒரு சில காவலர்களின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.

எனவே இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 445

    0

    0