‘என்ன ஏன்டா பாத்தோம்-னு FEEL பண்ணுவ நீ’… உச்சகட்ட மதுபோதையில் இளம்பெண் அலப்பறை… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 3:49 pm

திண்டுக்கல் அருகே உச்சகட்ட மதுபோதையில் தள்ளாடியபடி சென்ற இளம்பெண், சாலையோரம் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையின் ஓரமாக இளம் பெண் ஒருவர் அளவு கடந்த மது போதையில் மயங்கி உள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுப்பினார்.

மது போதையில் இருந்து தெளிந்த அந்தப் பெண்ணிடம், ‘நீ யாருமா..? எந்த ஊரு என்று கேட்டதற்கு பதில் கூறாமல் மது போதையில் தள்ளாடியபடி பரபரப்பான சாலையின் நடுவே நடக்க தொடங்கினார். அவ்வழியாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், அந்த இளம் பெண் சாலையில் நடந்து சென்றார்.

ஒரு கட்டத்திற்கு மேல் மது போதை உச்சத்திற்கு சென்று நடக்க முடியாமல் சாலையில் ஓரமாக நின்றிருந்த வாகனத்தில் சாய்ந்தபடி மயங்கினார். அதன் பின்னர் மீண்டும் மயக்கம் தெளிந்த அந்த இளம் பெண், அவ்வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சென்றார்.

பரபரப்பான சாலையில் இளம் பெண் மது அருந்திவிட்டு சாலையின் நடுவே சென்று வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 410

    0

    0