‘நிறுத்து.. பஸ்ஸ நிறுத்து’… காந்தி சிலை முன்பு குடிபோதையில் அலப்பறை செய்த பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 10:27 am

கோவை ; பொள்ளாச்சியில் குடிபோதையில் பெண் ஒருவர் போக்குவரத்தை சரி செய்வது போன்று அலப்பறை செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், கணவர் இறந்து விட்டதால் குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். திருப்பூரிலிருந்து பொள்ளாச்சி வந்த மகேஷ் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார்.

தலைக்கேறிய போதையில் செய்வது தெரியாமல் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சாலையில் வாகன போக்குவரத்தை சரிசெய்தார். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, மகேஸ்வரியை பெண் போலீசார் அங்கிருந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்துச் சென்றனர்.

https://player.vimeo.com/video/816421916?h=4ae36d05e2&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

குடிபோதையில் பெண் ஒருவர் போக்குவரத்தை சரி செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுவுக்கு எதிரான கொள்கையும், மதுவில்லாத நாட்டையும் உருவாக்க வேண்டும் என்று கனவு கண்ட காந்தியின் சிலைக்கு முன்பாகவே பெண் ஒருவர், குடிபோதையில் அலப்பறை செய்ததை பார்த்து சமூக ஆர்வலர்கள் முனுமுனுத்து வருகின்றனர்.

  • Saif Ali Khan attacked by Knife in his house at Mumbai பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!