மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளம்பெண்… திடீரென சாலையில் சுருண்டு படுத்ததால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
24 August 2023, 9:00 am

பழனி பேருந்து நிலையம் அருகே மது போதையில் சுயநினைவின்றி பெண் ஒருவர் சாலையில் படுத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்த பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்று திரியும் பெண்கள், பொதுமக்களிடம் யாசகம் பெற்று அந்த பணத்தில் மது அருந்தி விட்டு போதையில் சுற்றித் திரிகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் 25 வயது பெண் ஒருவர் கடும் மது போதையில் சாலையில் தள்ளாடி படி நடந்து வந்துள்ளார். அப்போது போதையில் உச்சத்தில் சென்ற அவர் நிலை தடுமாறி சாலையிலேயே சுயநினவின்றி ஆபத்தான நிலையில் படுத்துவிட்டார்.

சாலையில் சென்றவர்கள் பெண்ணை விபத்தில் சிக்கி இருப்பாரோ என்ற கோணத்தில் அவரை எழுப்ப முயன்ற போது, அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்தப் பெண்ணை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பெண் ஒருவர் மது போதையில் சுய நினைவின்றி சாலையில் படுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 333

    0

    0