பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவரை கண்முன் தெரியாமல் தாக்கிய இளைஞர்… குடிபோதையில் அராஜகம் ; அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 6:32 pm

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி அருகே பேருந்துக்கு நின்றவரை மதுபோதையில் கொடுரமாக வாலிபர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் மேல்புறம் அருகில் பிளாக் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் இவரது சகோதரர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக மேல்புறம் பிளாக் ஆபீஸ் சந்திப்பில் இருந்து மார்த்தாண்டம் செல்வதற்காக பேருந்துக்கு காத்திருக்கும் போது, அந்த வழியாக மதுபோதையில் வந்த அஜி என்ற வாலிபர் நாகராஜனை தகாத வார்த்தையால் திட்டிவிட்டு கொடுரமாக தாக்கியுள்ளார்.

பக்கத்தில் உள்ளவர்கள் தடுத்தும் நிறுத்தாமல் துரத்தி சென்று தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த நாகராஜன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

https://player.vimeo.com/video/867161454?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மார்த்தாண்டம் காவல்துறை முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதா..? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா..? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 700

    0

    0