‘என்னத் தாண்டி போ பார்க்கலாம்’…. பைபாஸில் லாரியை தலையால் முட்டி மதுபோதையில் இளைஞர் அலப்பறை….!!

Author: Babu Lakshmanan
17 May 2024, 2:10 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் மது பிரியர்களின் ஆபத்தான அட்டூழியம் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதோடு, இதுபோன்ற ஆபத்தை உணராத மது போதை ஆசாமிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் மது தமிழ்நாட்டை விட குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் ஏராளமானவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அங்கு படை எடுத்து மது குடித்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர், கர்நாடக மாநில எல்லைக்குள் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் அங்கும் இங்கும் ஆக நடமாடுகிறார்.

மேலும் படிக்க: சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்… மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் கைது!!!!!

மேலும், சாலையில் பரபரப்பான வாகன போக்குவரத்து உள்ள நிலையில் சற்றும் அவற்றை பொருட்படுத்தாமல், போதையில் தள்ளாடிக் கொண்டு இங்கும் அங்கும் ஆக திரிவதால், வாகன ஓட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதுடன், வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவதோடு வாகனத்தை இயக்குவதில் தடுமாறுகின்றனர்.

இவ்வாறு மது பிரியர் போதை தலைக்கேறிய நிலையில் மிகப்பெரிய சரக்கு லாரியையும் நிறுத்தி தடுமாறும் காட்சிகளை அந்தப் பகுதியில் சென்ற சிலர் வீடியோவாக பதிவிட்டு உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 405

    0

    0