‘கைய பிடிக்காத சார்…. தப்பு சார்’…. அரசு மருத்துவமனையில் காவலரை வம்புக்கு இழுத்த போதை இளைஞர்!!

Author: Babu Lakshmanan
27 April 2024, 11:35 am

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் அரசு மருத்துவமனையில் ஈடுபட்டிருந்த காவலரை வீண் வம்புக்கு இழுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிராஜன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: ‘கஷ்டப்படுத்தாதீங்க… நான் எம்எல்ஏ.. கிளர்க் மாதிரி நடத்தாதீங்க’ ; ஆய்வுக்கு சென்ற இடத்தில் விசிக எம்எல்ஏ காட்டம்!!

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இருவரும், மருத்துவர் இல்லை என தகராறு செய்துவிட்டு, காயத்துக்கு உரிய டிஞ்சரை எடுத்து போட்டுள்ளனர். அதன்பின் தலைக்கேறிய மதுபோதையின் காரணமாக அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் தகாத வார்த்தைகளில் பேசி, அவரை வீண் வம்பு இழுத்து அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர்.

இந்த காட்சியை அந்த மருத்துவமனைக்கு வந்த நபர் தன்னுடைய அலைபேசியில் எடுத்து அதனை இணையத்தில் பரப்பி உளளார், அந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

காவலரை தகாத வார்த்தைகளில் பேசி வீண் வம்பு இழுத்த அரவிந்தன் மற்றும் ஹரிராஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 192

    0

    0