ஓரமா போய் வெடிங்கனு சொன்னது குத்தமா..? வீட்டுக்குள் பட்டாசுகளை வீசி தாக்குதல் ; போதையில் இளைஞர்கள் அடாவடி… ஷாக் வீடியோ!!
Author: Babu Lakshmanan15 November 2023, 11:40 am
கையில் பிடித்து பட்டாசுகளை வெடித்தவர்களுக்கு அட்வைஸ் செய்த நபரின் வீட்டுக்குள் பட்டாசுகளை வீசி இளைஞர்கள் அலப்பறை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை பீளமேடு பகுதியில் தீபாவளி தினத்தன்று கோபால்சாமி நாயுடு பின்புறம் உள்ள வீட்டின் அருகே மதுபோதையில் பட்டாசுகளை வீசி இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதி குடியிருப்புவாசியான பாலசுந்தரம் என்பவர் கேள்வி கேட்டபோது, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவர் மீது பட்டாசு வீசியும், வீட்டிற்குள் பட்டாசு வீசியும் ரகளை ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாலசுந்தரம் என்பவர் அளித்த புகாரின் பேரில் இளைஞர்கள் 6 பேர் மீது நான்கு பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல் வெடிபொருள்களை கவனக்குறைவாக கையாளுதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பழமையான வீடு உள்ளது. அங்கு பாழடைந்து உள்ளதால் அந்தப் பகுதியில் ரோந்து பணிகள் முடக்கி விடப்பட வேண்டும் என பாலசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.