புகாரளிக்க வந்த பெண்.. நெருங்கிப் பழகிய டிஎஸ்பி.. அடுத்த நடந்த ட்விஸ்ட்!

Author: Hariharasudhan
4 January 2025, 3:25 pm

கர்நாடகாவில், புகாரளிக்க வந்த பெண்ணிடம் டிஎஸ்பி நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தின் மதுகிரி தாலுகாவில் காவல் துணை கண்காணிப்பாளராக ராமசந்திரப்பா (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தி டிஎஸ்பி ராமசந்திரப்பாவை, மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து ஒரு பெண்ணைச் சந்திக்கிறார்.

பின்னர், அந்தப் பெண்ணை டிஎஸ்பி, தன்னுடைய அறையில் இருந்து மற்றொரு அறைக்கு அழைத்துச் செல்கிறார். தொடர்ந்து, அங்கு வைத்து அப்பெண்ணுடன், அவர் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை அப்போது அருகில் இருந்த ஒருவர், ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் துமகூரு மாவட்டம், பாவகடாவைச் சேர்ந்தவர் என்பதும், நிலப்பிரச்னை தொடர்பாக மதுகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததும் தெரிய வந்துள்ளது.

Karnataka DSP with woman viral video

அப்போது தான் டிஎஸ்பி ராமசந்திரப்பா உடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தால், காவல் நிலையத்தில் வைத்தே அவருடன் தனிமையில் டிஎஸ்பி இருந்தது தெரிய வந்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக அப்பெண் தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!

இந்த நிலையில், மதுகிரி காவல் நிலையத்தில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த டிஎஸ்பி ராமசந்திரப்பாவை, கர்நாடக போலீஸ் டிஜிபி அலோக் மோகன், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், மதுகிரி போலீசார், டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர்.

  • Bigg Boss Anshitha interview இறுதிக்கட்டத்தை நோக்கி பிக்பாஸ்…இவர் தாங்க டைட்டில் வின்னர்…போட்டுடைத்த அன்ஷிதா..!
  • Views: - 104

    0

    0

    Leave a Reply