செல்ஃபி ஸ்டிக்கின் ஸ்குரூவில் வைத்து தங்கம் கடத்தல் ; துபாயில் இருந்து வந்த பயணி கைது.. ரூ. 27 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Author: Babu Lakshmanan
28 February 2023, 12:54 pm

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் செல்பி ஸ்டிக்ஸ்குரூவில் ரூபாய் 27லட்சம் தங்கம் கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.

இன்று காலை துபாயில் இருந்து இண்டிகா விமான மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தனர். விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட ஒரு ஆண் பயணி வைத்திருந்த செல்பி ஸ்டிக்ஸ்குரூவை எடுத்து பரிசோதனை செய்தபோது, அதில் ரூபாய் 27 லட்சத்தி 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 503 கிராம் தங்கம் இருப்பதை கண்டறிந்தனர்.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணிடம் யாருக்காக தங்கம் கடத்தி வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பல லட்சம் மதிப்புள்ள கடத்தி வருவது அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி