நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவைத் தொகை.. CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கை ஏற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2024, 10:59 am

CCCA ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் கோரிக்கையை மாநகராட்சி ஆணையாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் KCP Chandraprakash தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
CCCA ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பாக டவுன்ஹாலில் உள்ள நமது மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நமது சங்கத்தின் தலைவர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து ஆணையாளர் அவர்களை சந்தித்தோம்.

தற்போது city engineer அவர்கள் நேற்று சுமார் 72 bill களை ஒரு பட்டியலை இணைத்து இந்த பட்டியலின் படி fill செய்து கொண்டு வருமாறு திருப்பி அனுப்பினார் அதனை புதிய bill களுக்கு நடைமுறை படுத்தலாம் இந்த bill களை அவ்வாறே அனுப்பலாம் என்று ஆணையாளர் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

அதை ஆணையாளர் அவர்கள் ஏற்று புதிய bill களுக்கு மட்டும் அது நடைமுறை படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். அதுக்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் 5 முதல் 7 வருடங்களுக்கு மேலாக நமது ஒப்பதாரர்களின் withheld தொகை account section லில் நிலுவையில் உள்ளது அது முறைப்படி நடைமுறை படுத்தாமலும் அது எங்க உள்ளது என்று தெரியாமலும் உள்ள நிலையில் அதனையும் நடைமுறைப்படுத்தி நீண்ட காலமாக நிற்கும் withheld தொகைகளை ரிலீஸ் செய்ய ஆவணம் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் இனிவரும் ஒப்பந்தங்களிலும் பங்கு கொண்டு அனைவரும் பணி எடுத்து பணி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆணையாளரின் அன்புகிணங்க அனைவரும் அவர்களால் இயன்ற அளவு மட்டுமே பணியினை எடுத்து பணியினை வேகமாக முடித்து கொடுத்து மாநகராட்சிக்கும் நமது சங்கத்திற்கும் நற்பெயர் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

CEயிடம் இருக்கும் bill return வந்திருந்தால் பழைய bill கள் அப்படியே அனுப்பிக்கலாம் மற்றும் account section லும் தங்களுடைய பழைய withheld இருந்தாலும் follow பண்ணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 225

    0

    0