புயல் காரணமாக கரையோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பு : அழைத்தும் ஆட்சியர் வராத அவலம்.. களமிறங்கிய அதிகாரிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2022, 9:39 pm
மாண்டஸ் புயல் காரணமாக பழவேற்காடு மீனவர்கள் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
மாண்டஸ் புயல் காரணமாக தற்போது பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. பழவேற்காடு ஆண்டார் மடம் திருப்பாலைவனம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் குளத்து மேடு, செஞ்சியம்மன் நகர், பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோரை குப்பம், கோட்டகுப்பம், கடல் நீர் புகும் அபாயம் உள்ள பகுதியில் உள்ள மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நேரில் சென்று அறிவுறுத்தியும் வராத நிலையில் பழங்குடியின மக்களுக்கு மட்டும் உணவு குடிநீர் பெட்ஷீட் பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி தங்க வைத்துள்ளனர்.
அவர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆகியோர் உணவு வழங்கி நேரில் பார்வையிட்டு தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினர்.