திமுகவில் டம்மி பீசாக உள்ள பொன்முடிக்கு தன்னை பற்றி பேச எந்த தகுதியும் அருகதையும் இல்லை என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தமிழகத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆணையத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அதன் தலைவராக நியமிக்கபட்ட டிஜிபி கந்தசாமி பொறுப்பேற்றதிலிருந்து
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு பொய்யான முனையப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திமுகவில் தற்போது அமைச்சராக உள்ள 13 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் லஞ்ச ஒழிப்புதுறை மூலம் பதியப்பட்டு நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழக அமைச்சர்களின் மீதுள்ள ஊழல் வழக்குகள் நீர்த்து போகும் வகையிலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யும் வகையில் லஞ்ச ஒழிப்பு துறை செயல்படுவதாக் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தொழில் துறை அமைச்சராக இருந்தவர் மீது 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் திமுகவின் அமைச்சர் என்பதாலையே கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விடுதலை செய்வதற்கு காரணமாக கந்தசாமியும் அந்த மாவட்டத்தின் லஞ்சஒழிப்பு துறை செயல்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் மற்ற திமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை விசாரணை என்ற பெயரில் நீர்த்து போகின்ற வேலையை லஞ்ச ஒழிப்பு துறை செய்து வருவதாகவும், அதிமுக அமைச்சர்கள் மீது விசாரனை நடைபெற்று கொண்டிருக்கும் போதே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி கோட்டையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை பெற்று அவர் என்ன சொல்கிறாரோ அதனை செய்யும் துறையாக உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை இன்றைக்கு அடியாட்கள் துறையாக உள்ளதாகவும், ஆளும் கட்சிக்கு ஒரு அளவு கோலாகவும், முன்னாள் அமைச்சருக்கு ஒரு அளவுகோலாக லஞ்ச ஒழிப்பு துறை செயல்பட்டு வருவதால் தன் போக்கை மாற்றி கொள்ள வேண்டும் என சிவி சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது கொலை கொள்ளை, கற்பழிப்பு , போதை பொருட்கள் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை திருத்தி கொள்ள வேண்டும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடலாம் என நினைக்க வேண்டாம் என்றும் வாரிசு அரசியல் என்பது எதனால் கூறப்படுகிறது.
கட்சியின் தலைமை வழி நடத்துபவர்கள் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் அதன் பிறகு உதயநிதி என்று வருகிறது. அக்கட்சியில் அன்பழகன், துரைமுருகன் வீராசாமி போன்றவர்கள் இருந்தார்கள் அவர்களுக்கு தகுதியில்லையா திறமை இல்லா என கேள்வி எழுப்பினார்.
திமுகவில் டம்மி பீஸ் தான் பொன்முடி. இருக்கற பதவியை பிடிங்கி விட்டுருவார்கள் போல. அதனால தான் என்னை பற்றி பேசி வருவதாகவும் அவருக்கு என்னை பற்றி பேச அருகதையும் தகுதியும் இல்லை என கூறினார்.
தலைவர்கள் இறப்பிற்கு பிறகு தான் அதிமுகவில் தலைவர்கள் வருகிறார்கள் திமுகவில் ராஜ பரப்பரை போல் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் என்றும் உதயநிதி என்று பட்டம் சூட்டுபவர்கள் அதிமுகவினர் இல்லை என்றும் நடிகைகளோடு சுற்றி கிடந்தவரை கூட்டிட்டு வந்து கோட்டையில் உட்கார வைத்தவர்கள் நாங்கள் இல்லை என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
This website uses cookies.