மாஸ்டர் பட பாணியில் மாஸ் காட்டிய டூப் விஜய் : பேருந்தில் ஸ்டைல் காட்டியும், வடை சுட்டும் விஜய் ரசிகர்களுக்கு வாக்கு சேகரிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 6:25 pm

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விளங்கும் விஜய்க்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உண்டு. இவரை அரசியலுக்குள் இழுக்க ரசிகர்கள் போஸ்டர் அடித்து வா தளபதி என அழைத்தனர்.

ஆனால் தனது ரசிகர்கள் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என மாற்றி பல்வேறு நலத்திட்ட சேவைகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டு 129 பேர் வெற்றி பெற்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பாக பேச வைத்தது.

அதனால் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களை களமிறக்க முடிவு செய்த விஜய், விஜய் மக்கள் இய்ககத்தின் கொடி மற்றும் தனது புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி கொடுத்தார். இதனால் தேர்தலில் போட்டியிட ரசிகர்கள் ஆர்வமாகினர்.

தற்போது வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க நூதனமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மதுரை 88வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிடும் பெண் வேட்பாளர் நாகேஸ்வரியை ஆதரித்து கேரளாவிலிருந்து நகல் விஜய்யை அழைத்து வந்து விஜய் ரசிகர்கள் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் நகல் விஜய்யை கண்டு வியந்து பார்த்தனர். சிலர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். பின்பு நகர்ந்து பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்த போது நின்று கொண்டிருந்த பேருந்தில் மாஸ்டர் படம் விஜய் பாணியில் ஓடிவந்து பேருந்தில் ஏறி உள்ளே இருக்கும் பயணிகளுக்கு துண்டு பிரசங்கத்தை வழங்கி மாஸாக வாக்குகள் சேகரித்தார்.

பின்பு அங்கு இருந்த தேனீர் கடையில் வாக்கு சேகரிக்கும் போது வடை சுட்டு வாக்குகளையும் சேகரித்தார். விபரம் தெரியாதவர்கள் உண்மையில் விஜய் தான் வந்துவிட்டார் என விஜய், விஜய் என அழைத்து கைகாட்டினர்.

இதையெல்லாவற்றையும் விட அவர்கள் கூறிய வாக்குறுதி என்னவென்றால், பிரச்சாரத்தில் நகல் விஜய் வெற்றி பெற்றால் நாளை உங்கள் தொகுதியில் அசல் விஜய் வருவார் என உறுதி அளித்தனர். நகல் விஜய்யை காண அதிகமான மக்கள் கூடியதால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1907

    0

    0