வாக்காளர்களே எஜமானர்கள்.. யாரை தேர்ந்தெடுக்கனும்னு அவங்களுக்கு தெரியும் – உணர்ச்சி பொங்க பேசிய துரை வைகோ..!

Author: Vignesh
4 June 2024, 10:30 am

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர். திருச்சி பாராளுமன்ற மதிமுக வேட்பாளர் துரை வைக்கோ பேட்டி கொடுத்துள்ளார்.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி கொடுக்கையில், தற்போது வரை முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன்.

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர். என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை, எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன் எனக் கூறினார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!