ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சார பீரங்கியாக செயல்படும் தமிழக கவர்னர் : துரை வைகோ விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 12:58 pm

திருச்சி ; ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சார பீரங்கியாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் மதிமுக நிர்வாகி பணி ஓய்வு விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசியதாவது :- தமிழக கவர்னர் ரவி, திராவிட சித்தாந்தங்கள் பற்றி பலவாறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கவர்னராக இருப்பவர் அரசியலை கடந்த, மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.

ஆன்லைன் சூதாட்டத்தால், பணத்தை இழந்தவர்களில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தமிழக அரசு, அதற்கான சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கவர்னருக்கான அடிப்படை கடமைகள் கூட தெரியாமல் செயல்பட்டுக் கொண்டுள்ளார். தேவையில்லாமல் அரசியல் பற்றிய கருத்துக்களையும், திராவிட சித்தாந்தங்கள் பற்றிய கருத்துக்களையும் பேசி, ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவிக்கப்படாத பிரச்சார பீரங்கியாக செயல்படுகிறார்.

தேர்தலில் பணம் கொடுக்கக் கூடாது, என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். யார் பணம் கொடுத்தாலும், மக்கள் முடிவு எடுத்து விட்டால், அதை மாற்றும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. யாராலும் மாற்ற முடியாது. தேர்தல் முடிவு எப்படி இருந்தது என்பது தெரியும். தேர்தலுக்காக, பணம் கொடுத்தவர்களில் பலர் தோற்றுள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் தான், ஈரோடு இடைத்தேர்தலில், எழுந்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவ வீரராக இருப்பவர் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டியவர். ஆனால், எங்களுக்கு சுடத் தெரியும். குண்டு வைக்கத் தெரியும் பகிரங்கமாக சொன்னவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். வன்முறை தூண்டும் வகையில், பேசிய அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 557

    0

    0