சென்னை ; திமுகவுடன் கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும், மாநில ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர் திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கழகத்தின் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா தொடக்க உரையாற்றினார். மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டிசி ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பாபு, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மா.வை. மகேந்திரன், தொண்டர் அணி மாநில செயலாளர் பாஸ்கரசேதுபதி, மாணவரணி மாநில துணைச் செயலாளர் முகவை சங்கர் உள்ளிட்ட கழகத்தின் மாணவரணி மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வைகோ அவர்களின் பொது வாழ்க்கையை மாமனிதன் வைகோ என்ற தலைப்பில் ஆவணப்படமாக தயாரித்து, அதை தமிழக முதலமைச்சர் வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆவண படத்தை பார்ப்பதற்கு காரணமாக இருந்த தலைமை கழகச் செயலாளர் துரை வைக்கோவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தும், இயக்கத்தின் பணிகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல இணையத்தில் பங்கெடுப்பது, மாநில ஆளுநர் பொறுப்புகள் தேவையில்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டத் திருத்ததின் மூலம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறியதாவது :- ஆளுநர் பதவி தேவையில்லை, அது ஓழிக்கப்பட வேண்டும் . பாஜக ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.
ஆன்லைன் அவசர சட்ட மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்துவதன் காரணமாக, தமிழகத்தில் வாரம் இரண்டு பேர் உயிரிழந்து வருகின்றனர். பிற மாநிலங்களிலும் உயிரிழந்து வருகின்றனர்.
ஐஐடி பணியிடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வேண்டும். ஆவினில் நெய் ஒரு லிட்டர் விலை 50 ரூபாய் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாதது.
பாஜக ஆடுகின்ற கர்நாடக மாநிலத்தை ஒப்பிடும்போது இதன் விலை தற்போது சரிசமமாகவே இருப்பதாக கூறினார். மேலும், திமுகவுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும். மதச்சார்பற்ற கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகளும் இணைய வேண்டும், எனக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவே அவர் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது வரவேற்கக் கூடியது. வாரிசு அரசியல் என்பதை தான் ஏற்கவில்லை. மக்கள் விருப்பப்பட்டால் தான் ஒருவர் அரசியலில் வளர முடியும், எனக் கூறினார்.
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
This website uses cookies.