‘குவாட்டர் பாட்டிலில் தூசி… இனி இந்த பார் தீப்பற்றி எரியும்’ ; போதை வாலிபர் எச்சரிக்கை.. வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 2:17 pm

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் “குவாட்டர் பாட்டிலில் தூசி இருந்ததால், தமிழக அரசைக் கண்டித்து ஆவேசமாக போதை வாலிபர் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் குடிப்பதற்காக மது வாங்கியுள்ளனர். இதில் இரண்டு குவாட்டர் பாட்டில்களை அவர்கள் வாங்கிய நிலையில், அதில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்குள் பெரிய அளவிலான துகள் ஒன்று கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர்கள், அந்த பாட்டிலை மதுபான கடையில் திரும்ப கொடுத்த போது, ஊழியர்கள் அதை பெற்றுக்கொண்டு, மாற்று மது பாட்டிலை கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை வாலிபர்களில் ஒருவர், அந்த குவாட்டர் பாட்டிலை துகளோடு வீடியோ எடுத்ததோடு ஆவேசமாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியதாவது :- “135-ரூ கொடுத்து ஒரு குவாட்டர் வாங்கினால், அதில் என்னென்னவே கிடக்கிறது. இதை குடித்து கொண்டு சாக வேண்டுமா..? என கேள்வி எழுப்பி, இதேப்போல் பாட்டில்கள் வந்தால் தீப்பற்றி எரியும் இரும்பிலி பார்,” என ஆவேசமாக பேசியுள்ளார்.

அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நிலையில், அது தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ