புகாரளிக்கச் சென்ற பெண்.. எஸ்ஐ சொன்ன ‘அந்த’ வார்த்தை.. மதுரையில் நடந்தது என்ன?
Author: Hariharasudhan31 January 2025, 2:25 pm
மதுரையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை: மதுரையின் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் சண்முகநாதன். இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர், தன்னை சிலர் தாக்கியதாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில், மூன்று பெண்கள், ஒரு ஆண் என நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை எஸ்ஐ சண்முகநாதன் கவனித்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மேலும் இரு பெண்களைக் கைது செய்வதற்கு 1 லட்சம் ரூபாய் கவிதாவிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் அளிக்க விருப்பமில்லாத கவிதா, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் சண்முகநாதன் மீது புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், முதற்கட்டமாக ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, கவிதாவிடம் கொடுத்து சண்முகநாதனைப் பிடிக்கும் நடவடிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: யாரு சொன்னா அப்டினு.. அஜித்துக்கு போன் போட்ட விஜய்.. காரணம் என்ன தெரியுமா?
இதன்படி, புதூர் பேருந்து நிலையம் அருகே சண்முகநாதன், கவிதாவிடம் இருந்து பணத்தை வாங்கியுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சண்முகநாதனை கையும் களவுமாகக் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.