தமிழகம்

அரசு நிர்வாகத்தை இப்படியா தூய்மைப்படுத்துவது? ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு ஆணையாளர் பதவி!

உதகையில் ஊழல் வழக்கில் சிக்கி காத்திருப்போர் பட்டியலில் இருந்தவருக்கு நெல்லை மாநகராட்சி துணை ஆணையளராக பதவி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி: கடந்த ஆகஸ்ட் மாதம், உதகை நகராட்சி ஆணையாளராக ஜஹாங்கீர் பாஷா என்பவர் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு சட்டவிரோத, விதிமீறல் செயல்களுக்கு பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், வழக்கம்போல் சிலரிடம் பணத்தை சமீபத்தில் பெற்று உள்ளார்.

இதன் பேரில், கடந்த நவம்பர் 9ஆம் தேதி சில விதிமீறல் செயல்களுக்காக சிலரிடம் பணப்பைகளை ஜஹாங்கீர் பாஷா பெற்று உள்ளார். தொடர்ந்து அவர் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தொட்டபெட்டா சாலையில் சென்று கொண்டிருந்த அவரை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், அவரை சோதனை செய்தபோது, கணக்கில் வராத 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கி உள்ளது. இதனையடுத்து, இந்தப் பணம் எதற்காக பெறப்பட்டது, யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து பாஷாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் பேரில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவும் செய்தனர்.

இதனையடுத்து, ஜஹாங்கீர் பாஷா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருந்தார். இந்த நிலையில், ஜஹாங்கீர் பாஷாவுக்கு நெல்லை மாநகராட்சியின் துணை ஆணையராக பொறுப்பு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இவர் ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இவ்வாறு ஜஹாங்கீர் பாஷா பணிபுரிந்தபோது, நெல்லை மாநகராட்சி சார்பில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்தபோது, பாஜகவினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி, மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை திறந்துவிட்டு பிரச்னையிலும் ஈடுபட்டனர்.

அப்போது நெல்லை மாநகராட்சியின் மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை மண்டலத்தில் உதவி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா சிக்கிய நிலையில் தான் அவர் இங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஊழல் வழக்கில் சிக்கியபோது அவருக்கு இந்தப் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டன தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ரூ.12 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யாமல் நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்துவதா? அரசு நிர்வாகத்தை இப்படியா தூய்மைப்படுத்துவது?

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தொட்டபெட்டா சந்திப்புக்கு அருகில் ஜகாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்த மகிழுந்தை கடந்த 10-ஆம் நாள் கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடமிருந்து ரூ.11.70 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அதை நான்கு தரப்பினரிடமிருந்து அவர் வசூல் செய்து தமது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வரி இனத்தை மாற்றிக் கொடுத்ததற்காக ரூ.2.49 லட்சம், சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகன நிறுத்த உரிமம் வழங்கியதற்காக ரூ.2 லட்சம், பாரதியார் வணிக வளாகத்தில் துணிக்கடையை உணவு விடுதியாக மாற்றியதற்காக ரூ.2.50 லட்சம், தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தின் வரியை குறைத்து நிர்ணயம் செய்ததற்காக ரூ. 4.71 லட்சம் கையூட்டு வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அவர் பயணம் செய்த மகிழுந்தை ஓட்டி வந்த ஓட்டுனரும் ஜஷாங்கீர் பாஷா கையூட்டு வாங்கியதை உறுதி செய்தார். ஜஹாங்கீர் பாஷாவுக்கு எதிராக இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் நிலையில் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்; பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், விசாரணைக்குப் பிறகு அவரை சுதந்திரமாக நடமாட அனுமதித்த தமிழக அரசு, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இது அவர் ஏற்கனவே வகித்த பதவியை விட அதிகாரம் மிக்கதாகும்.

இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக அதிமுக, காங், கம்யூ ஆர்ப்பாட்டம்.. திருப்பூரில் பரபரப்பு!

ரூ.500 கையூட்டு வாங்கியதற்காக பல கிராம நிர்வாக அலுவலர்களும், கடை நிலை ஊழியர்களும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ரூ.11.70 லட்சம் கையூட்டு வாங்கியதுடன், அதற்கான சான்றுகளும் தெளிவாக இருக்கும் நிலையில் ஜஹாங்கீர் பாஷா மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரம் மிக்க பதவியை வழங்குவதன் மூலம் தமிழக அரசு சொல்லவரும் செய்தி என்ன?

இப்படித்தான் ஊழலை ஒழித்து அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தப் போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். கையூட்டு வாங்கிய ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்வதுடன், அவரை பணியிடை நீக்கமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

2 seconds ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

1 hour ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

2 hours ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

3 hours ago

நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…

3 hours ago

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

4 hours ago

This website uses cookies.