அறந்தாங்கி அம்மா உணவகத்தில் DYFI அமைப்பினர் தர்ணா : மேளதாளங்கள் முழங்க குடிநீர் டேங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்

Author: Babu Lakshmanan
23 November 2022, 11:04 am

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெரும் வகையில், தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் அமைத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி மக்களின் நன் மதிப்பை பெற்றனர். தற்போது, நடந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் அம்மா உணவகங்கள் சிறப்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் நிலையில், நல்ல முறையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் செயல்பட்டு வந்த தூய குடிநீர் வழங்கும் ஆர்ஓ பழுதடைந்து, அது சரி செய்யப்படாத காரணத்தினால் உணவகம் முழுவதும் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனை அறிந்த அறந்தாங்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இதனை கண்டித்து முப்பதற்க்கும் மேற்பட்டோர் மாலை மற்றும் மேல தாளத்துடன் கண்டன கோஷங்கள் எழுப்பி, அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததால் உணவகத்தில் உள்ள தண்ணீர் டேங்குக்கு அஞ்சலி செலுத்தி, உணவகத்திற்குள் அமர்ந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு DYFIஜ சேர்ந்த நிர்வாகிகள் கோபால், கவுதம் பாண்டி், காதீர், சங்கர், தினேஷ் காளிதாஸ், கவி பாலா, கருணா, தங்கராசு, தென்றல் கருப்பையா உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 573

    0

    0