ஊட்டி செல்ல லைன் கட்டி நிற்கும் வாகனங்கள்.. கோர்ட் போட்ட கண்டிஷன் : கடும் நெரிசல்!
Author: Udayachandran RadhaKrishnan9 November 2024, 5:51 pm
நீலகிரி கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை இந்த இ பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில் நேற்றைய தினம் இ-பாஸ் நடைமுறையை நீலகிரி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் சரியான முறையில் பின்பற்றாததால் தொடர்ந்து மலைப்பகுதியில் வாகன எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததையடுத்து ஏற்கனவே இபாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நீலகிரி கொடைக்கானல் பகுதிகளில் இ பாஸ் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நீலகிரிமாவட்ட நுழைவாயிலான மேட்டுப்பாளையம்வழியாக நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்செல்கின்றனர்.
இதை அடுத்து சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள கல்லார் சோதனை சாவடியில் இ_பாஸ் பதிவு செய்துள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சோதனை சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.