சென்னையில் நில அதிர்வு? மூன்று மாடி கட்டிடம் குலுங்கியதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 11:27 am

சென்னை இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

மூன்று மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து ஊழியர்கள், பொது மக்கள் வெளியேறியுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கட்டிடம் குலுங்கியதா என்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புவியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சமீபத்தில துருக்கி, சிரியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!