பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை.. தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
22 April 2024, 7:53 pm

பிரதமர் மோடி பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சியில் அப்துல் சமது வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திலிருந்து இந்த வருடம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி குழு ஒருங்கிணைப்பு சார்பில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹஜ் கமிட்டி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது
மொஷின்சாகிப், ராஜாமுஹம்மது, சம்சுதீன், மாமன்ற உறுப்பினர் பயாஸ் அஹமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த ஹஜ் கமிட்டி தலைவரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது :- வரும் 26 ஆம் தேதி முதல் விமானம் ஹஜ்க்கு புறப்பட உள்ளது. ஜூலை மாதம் 9ம் தேதி வரை விமானங்களில் ஹாஜி பயணிகள் மக்காவை நோக்கி செல்ல உள்ளனர். இவர்களோடு தன்னர்வர்களும், அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தன்னார்வர்களும், ஹஜ் கமிட்டியோடு இணைந்து செயல்பட உள்ளனர்.

மேலும் படிக்க: பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு பெற்றுத் தருவதாக மோசடி.. பாஜக நிர்வாகி மீது பெண்கள் புகார்..!!!

இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5637 பேர் செல்ல தயாராக உள்ளனர். கணிசமான வகையில் பெண்களும் ஹஜ் செல்ல உள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதலாக 1000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர். அரசின் மானியம் கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் வழங்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் இந்துக்கள் சொத்தை எடுத்து இஸ்லாமிய கொடுத்து விடுவார்கள் என மோடி பிரச்சாரம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு, “தேர்தல் கமிஷன் இதை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து,” என தெரிவித்தார்.

  • Kanguva movie OTT date announcement 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”
  • Views: - 343

    0

    0