பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி : விறகு அடுப்பில் சமைத்து இந்திய கம்யூனிஸ்ட் நூதன போராட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 April 2022, 1:20 pm
திருப்பூர் : பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் 980 முதல் 1050 வரையிலும் , பெட்ரோல் லிட்டருக்கு 108 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது சாமானிய மக்களை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் திருப்பூர் புதூர் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டர் மட்டும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.