ஈசிஆர் சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்ற பெயர் பொதுமக்களுக்கு குழப்பம் இல்லை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தான் குழப்பம் என அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பால் பன்ணைமுதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை 14 கி.மீ நீண்ட நாள் கோரிக்கை குறித்து கேள்விக்கு, 2ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் NHAI தான் இதை செய்ய முடியும்.
திருச்சியில் 1.6 கிலோ மீட்டர் : அண்ணா சிலை முதல் மல்லாச்சிபுரம் வரை உயர்மட்ட சாலை – அதே போல் தலைமை தபால் நிலையம் முதல் எம்ஜிஆர் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் மதிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது – இந்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும்.
பழைய சாலைகளை அப்புறப்படுத்திதான் புதிய சாலைகள்உருவாக்கப்படுகிறது. மில்லிங் செய்யாமல் ரோடு போடப்படுகிறது என்று எனக்கே புகார் வந்தது. ஆனால் கண்டிப்பாக மில்லிங் முறை செய்துதான் சாலைகள் அமைக்கப்படுகிறது. 6 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகள் வாங்கி வைத்து வருகிறோம். உயராமான மரக்கன்றுகள் தான் சாலையில் வைக்கப்பட்டு வருகிறது.
டெண்டர் பணிகள் முடிக்காமலே சில இடங்களில் மிரட்டி பணம் வாங்குவதாக தகவல்கள் வருகிறது என்ற கேள்விக்கு – கண்டிப்பாக இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம், டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எனக்கு வந்துள்ளது.
அதிமுக திமுக என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுபவார்கள் என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றுவது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிற ஜெயக்குமாரின் கருத்துக்கு, நெடுஞ்சாலையை தனித் துறையாக்கியவர் கருணாநிதி.
கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை சரி செய்து, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கருணாநிதி. அதனால் அந்த சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயரிட்டுள்ளோம். இந்த பெயரால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது. அமைச்சர் ஜெயக்குமாருக்கு மட்டும் தான் குழப்பம் வரும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
இறுதியாக இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் கே.என் நேரு, “நான் இதற்கு பதில் சொல்வேன். ஆனால், சென்சாரில் கட் ஆகி விடும்” என்று அமைச்சர் நேரு கூறினார்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
This website uses cookies.