ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2025, 10:58 am

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.

அப்பொழுது பொதுக்கூட்ட மேடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் மக்களுக்காக உழைக்கும் கட்சி ஒரே கட்சி அதிமுக தான் என்றும், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அடிப்பதாகவும், ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில் விற்பனை செய்வதாகவும், இப்போ பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் ஒரு கோடி பாட்டிலுக்கு 10 கோடி என்று குற்றம் சாட்டிய நேரத்தில், கரூர் கம்பெனி என ஆரம்பித்தபோது சண்முக சாலையில் உள்ள மசூதியில் இருந்து தொழுகை சத்தம் கேட்டதால் சிறிது நேரம் மேடையில் அமைதி காத்திருந்து தொழுகை முடிந்த அடுத்த நொடியே மீண்டும் ஆவேசமாக பேச தொடங்கினார்.

இதையும் படியுங்க: தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

அப்பொழுது அதிமுகவில் மீண்டும் செந்தில் பாலாஜியை சேர்த்து வைத்திருந்தால் ஒரு தொகுதியை ஜெயிக்க வைத்திருப்பாரு. ஆனால் மொத்த கட்சியும் ஜெயிலுக்குள் தள்ளி இருப்பார்கள் என்றும், டெல்லியில் இருந்து ED வந்திருப்பதாகவும் அவர்கள் எல்லா டேட்டாவையும் எடுத்திருப்பதாகவும் ,எல்லா கதையும் திமுகவுக்கு முடிந்த தாகவும், சட்டசபையில் திமுக அமைச்சர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை என்றும், ஈ டி வந்துவிட்டால் ஈயும் ஆடாது,மயிலும் ஆடாது ,குயிலும் ஆடாது.

எல்லாவற்றையும் தாத்தா எடுத்துட்டு போயிட்டாங்க. அதனால் எல்லாம் கோர்ட்டுக்கு போவதாகவும் எந்த கோர்ட்டுக்கு போனாலும் மக்கள் கோர்ட்டில் கண்டிப்பாக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று விமர்சனம் செய்தார்…

மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், அப்பொழுது குறிப்பாக ஆறு மாத காலம் இருப்பதாகவும், உங்களிடம் சொல்லாமல் எந்த கூட்டணியும் அமைக்க முடியாது, கூட்டணி பற்றி தற்போது அந்த அவசரப்பட தேவையில்லை.

கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்தும் பணியில் தமிழகத்தில் 68500 வாக்குச்சாவடிகளில், 9 பேர் கொண்ட இளம் ரத்தம் பாய்கிற புதிய ராணுவ படையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ,ஒரு சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி, ஒரு மறுமலர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

ED Catches All Information About DMK Says Former Minister

ஆகவே இந்த பணி என்பது கட்டமைப்பு பணியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆளுங் கட்சியின் அவல நிலையை தோல் உரித்து காட்டுகின்ற போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்…

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…
  • Leave a Reply