SDPI கட்சி முக்கிய தலைவர் வீட்டில் ரெய்டு.. ED அதிகாரிகள் சோதனையால் கோவையில் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2025, 12:58 pm

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு எக்ஸ்டென்ஷன் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜிக். இரும்பு கடை வைத்து தொழில் செய்து வரும் இவர் எஸ்டிபிஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

இதையும் படியுங்க : மனைவி சுயஇன்பம் செய்கிறார்.. கணவரின் மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்நிலையில், இன்றைய தினம் இவரது வீட்டில் அமலாக்க துறையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சி.ஆர்.பி.எஃப் போலீஸ் பாதுகாப்பு உதவியுடன் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்துள்ள ரீலா என்பவர் இடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ED Raid in SDPI Important Leader House

அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக சந்தேகத்தின் பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கேரளா பதிவு கொண்ட காரில் வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!
  • Leave a Reply