கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2025, 11:24 am
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே என் நேருவின் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த அமலாக்க துறையின் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படியுங்க: அந்த தியாகி யார்? டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கவனத்தை ஈர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்!
இதேபோல் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், தில்லைநகர் 10வது கிராஸ் உள்ள அமைச்சருக்கு தம்பியான ராம ஜெயம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து திருச்சி வந்து அமலாக்கதுறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அமலாக்கத்துறையினால் சோதனை நடத்தப்பட்டு வரும் வீடுகளில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது தில்லை நகரில் கே எம் நேரு வீட்டில் மாமன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம் காஜா மல்லிகை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமைச்சர் கே என் நேரு வீட்டில் நடைபெறும் சோதனைக்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது இருந்த போதும் அவருடைய சகோதரர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரு வீட்டில் நடைபெறும் சோதனை திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரின் ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சென்னையில் இருந்து அமைச்சர் வீட்டிற்கு முன் யாரும் இருக்க வேண்டாம் என கூறியதையடுத்து அவர் ஆதரவாளர்கள் அங்கிருந்து சிலர் புறப்பட்டு சென்றனர். மேலும் பலர் அங்கு இருந்து புறப்படாமல் அப்பகுதியில் நிற்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு ஆணையர் ஸ்ரீதர் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.