ED ரெய்டு ரொம்ப ஜாலியா போகுது : செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி கிண்டல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2023, 8:51 pm

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், முதல்வரின் அறிவுதலின் பேரில் மயிலாடுதுறையில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு ஆயிரம் நபர்களுக்கு பொற்கிளி வழங்கியிருக்கிறோம். மாலையில் மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் உள்ளது.

இதில் கலந்துகொண்டு நாளை நாகப்பட்டினம் செல்ல உள்ளேன். தொடர்ந்து பாஜக திமுகவை எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர் கேள்விக்கு? பாஜக திமுகவை எதிர்ப்பதை போன்று திமுகவும் தான் பாஜகவை எதிர்க்கிறது. பாஜக திமுகவை எதிப்பதே திமுக நல்ல பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கு அர்த்தம்.

ஒட்டுமொத்த தமிழகமும் பாஜாகவை எதிர்க்கத் தான் செய்கிறது. இப்பொழுது மட்டுமல்ல எந்த காலத்திலுமே பாஜகவை திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கட்டும், தமிழக மக்களாக இருக்கட்டும், ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிர்த்துக் கொண்டுதான் தான் இருப்பார்கள். மேலும் அமலாக்கத்துறை சோதனை மிகவும் ஜாலியாக சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி